சென்னை:தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 12) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என மாணவரின் தந்தை ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, "கல்வி பொதுப்பட்டியில் இருப்பதால் நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தாலும் நான் கையெழுத்திட மாட்டேன். நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்.
நீட் தேர்வு திறமையான மாணவர்களை கொண்டு வரவே உள்ளது. பயிற்சி மையம் இருந்தால் தான் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்று ஒரு போலி பிம்பத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளனர்" என கூறினார். ஆளுநரின் இந்த நீட் தேர்வு குறித்த கருத்து மேலும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், "ஆர்.என் ரவி அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காதவர், தன்னுடைய பதவியை அவமானப்படுத்துகிறவர்.