சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி கண்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, எட்டு பேர் கொண்ட கும்பலால் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். செல்வத்தின் மனைவி சமீனா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.