தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா?

சென்னை : நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா?
ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா?

By

Published : May 26, 2020, 8:12 PM IST

பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி பேசியபோது, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்ற கருத்தை சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார்.

இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தும் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண் குமார் என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், பட்டியலின மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் பாரதியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மே 23ஆம் தேதி அன்று சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அன்றே இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா?
நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்த பதவிக்கு வருகிறார்கள் என்பதை போல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவு படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் இன்று மனு அளித்தார். இந்த மனு காணொலி சந்திப்பின் மூலமாக விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details