தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது - கல்யாண சுந்தரம் புகார்

dmk-rs-bharathi-arrested
dmk-rs-bharathi-arrested

By

Published : May 23, 2020, 7:08 AM IST

Updated : May 23, 2020, 9:48 AM IST

07:03 May 23

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பட்டியலின மக்களை அவமதிக்கும்விதமாகப் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதையடுத்து ஆர்.எஸ். பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் அவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க:ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி!

Last Updated : May 23, 2020, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details