தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவின் ஊழல்கள் பற்றி புகார் அளிப்பதால் கைது - ஆர்.எஸ். பாரதி - caese against r.s.bharathi

சென்னை: அதிமுக செய்யும் ஊழல்களைப் பற்றி புகாரளிப்பதால் நூறு நாள்கள் கடந்த பின்பு கைது நடவடிக்கை எடுக்கின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

dmk-rs-bharathi-arrested-chennai
dmk-rs-bharathi-arrested-chennai

By

Published : May 23, 2020, 10:49 AM IST

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பட்டியலின மக்களை அவமதிக்கும்விதமாகப் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின்பேரில் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஆர்.எஸ். பாரதி மீது அளிக்கப்பட்ட புகார்

கைதுசெய்யப்படும்போது பேசிய அவர், "நான் பேசி நூறு நாள்கள் கடந்துவிட்டன. என்னைக் கைதுசெய்வதற்கு காரணம் நேற்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்த ஊழல் ஒன்றைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தேன்.

அதுமட்டுமல்லாமல் கோவையில் கிருமிநாசினி, பிளிச்சிங் பவுடர் கொள்முதல்களில் ஊழல் நடைபெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது புகார் அளிக்க ஆதாரங்கள் தயார் செய்யப்பட்டுவந்தன. இந்த நிலையில் நான் கைதுசெய்யப்பட்டுள்ளேன்.

ஆர்.எஸ். பாரதி

நான் சிறையில் அடைக்கப்பட்டாலும் எனது வழக்குரைஞர்கள் அப்புகார்களை அளிப்பார்கள்" எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் 28 நீதிபதிகள் இடமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details