பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆர்.எஸ். பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்! - rs bharathi at court
சென்னை: பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்டிருந்த பிணை நேற்றுடன் முடிவடைந்ததால் இன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் சரண்
இவ்வழக்கில் சில நாள்களுக்கு முன் கைதுசெய்யப்பட்ட அவருக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியிருந்தது. இந்தப் பிணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானார்.
சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன் அவர் முன்னிலையானதை அடுத்து அவரின் பிணை மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது.
Last Updated : Jun 1, 2020, 12:28 PM IST