சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் நுழைந்து அம்மா உணவக பெயர் பலகை, ஜெயலலிதா புகைப்படத்தை அடித்து நொறுக்கினர். அங்கு உணவிற்காக வைத்திருந்த காய்கறிகளையும் கீழே தள்ளி நாசம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தை சீரமைத்த திமுக! - dmk stalin
சென்னை: முகப்பேரில் திமுக தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம், திமுக கட்சியினரால் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில், உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரைக் கழகத்திலிருந்து நீக்கவும் கழகத்தலைவர் உடனடியாக உத்தரவிட்டார்" என குறிப்பிட்டுள்ளார்.