கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ. அன்பழகன் இன்று காலை காலமானார். சேப்பக்கம் - திருவல்லிக்கேணி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ. அன்பழகனின் மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், “திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவினையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 10) முதல் மூன்று நாள்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாள்களுக்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.