அந்தக் கடிதத்தில், கீழடியில் உள்ள தமிழர்களின் பண்பாடுகளைக் கண்ட வியப்பிலும், பெருமிதத்திலும் - தான் வான்வரை பறந்து சென்றதாகவும், கீழடியினால் தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் புகழப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்த தமிழர்களின் மொழி, இனம், பண்பாடுகளுக்கான சான்றாக இன்று கீழடி விளங்குகிறது. எனவே, தமிழர்களின் வரலாற்று உண்மைகள் மண்மூடி மறைக்கப்படக்கூடாது. நூறு ஆண்டுகளாக பல போராட்டங்களைக் கடந்து பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத்தந்தனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
கீழடி அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்யும் ஸ்டாலின் 2017ஆம் ஆண்டு அகழாய்வில் ஈடுபட்டுவந்த ஆய்வாளர்கள் திடீரென மாற்றப்பட்டு, ஆய்வில் கிடைத்த பொருட்கள் மைசூருவிற்கு மாற்றும் முயற்சி நடந்தபோது கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வரலாற்றுப் பெருமைகளை தமிழ்நாட்டிலேயே பாதுகாக்கவேண்டுமென திமுக சார்பில் வலியுறுத்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீழடி ஆய்வு, கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் சிறப்பான நகர நாகரிகத்தைக் கொண்டிருந்ததை பறைசாற்றுகிறது. சுட்ட செங்கற்களாலான வீடுகள், சுண்ணாம்பு பூச்சுகளாலான சுவர்கள், கழிவுநீர் மேம்பாடு, நீர் மேலாண்மை என வியந்து போற்றும்வண்ணம் வாழ்ந்துள்ளனர். மேலும், வைகை ஆற்று நாகரிகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் கருப்பு, சிவப்பு வண்ணமும், அவற்றில் இடம்பெற்றிருந்த கீறல் எழுத்துக்களும் மக்களின் எழுத்தறிவை விளக்குவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்யும் ஸ்டாலின் நம் சங்கத் தமிழர்கள் வேளாண்மையைப் போற்றி பசு, எருது, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்திருப்பதையும், உணவுக்காக விலங்குகளைப் பயன்படுத்தியிருப்பதையும் ஆய்வுகளின் வழியே அறிய முடிகிறது என்றும்,
இரும்பு ஆயுதங்கள், தங்க அணிகலன்களின் கலை வேலைப்பாடுகள் வியப்பைத் தருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சிந்தனைக்கு வேலைதரும் சதுரங்க விளையாட்டையும் அவர்கள் அன்றே உபயேகித்திருப்பது அனைவருக்கும் வியப்பாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலினிடம் நுண்பொருட்கள் குறித்து விளக்கும் ஆய்வாளர் மேலும், தமிழ்ச்சான்றோர்களின் வாழ்வியலை அறிந்துகொள்ள உதவிய தமிழ்நாடு தொல்லியல்துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பி.ஆசைத்தம்பி ஆகியோருக்கான நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
கீழடியாக இருந்தாலும், சிந்து சமவெளி நாகரிகமாக இருந்தாலும் தமிழர் பண்பாட்டின் நீட்சியாகவே இருக்கவேண்டும் என்ற பல ஆய்வாளர்களின் கருத்தை நிரூபிக்கும் விதமாகவே இந்த ஆய்வு அமைந்துள்ளது என்றார்.
கீழடி அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்யும் ஸ்டாலின் இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்படவேண்டுமென பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அதனைத் தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்கவேண்டுமென கீழடி ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:கீழடி அகழாய்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின் - புகைப்படத் தொகுப்பு