அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி. கேம்பஸில் 2019ஆம் ஆண்டுக்கான தத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி. கேம்பஸில் 2019ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு அதில், 'இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு' என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!