தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துங்கள்' திமுக மனு - Dmk petition to sathyapratha sagu for increase security in counting booth

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தக்கோரி தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Dmk petition
ஆர்.எஸ்.பாரதி

By

Published : Apr 24, 2021, 2:47 PM IST

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும், நேர்மையாகவும், நியாயமாகவும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமெனவும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக வழக்கறிஞர்கள் நீலகண்டன், பச்சையப்பன் ஆகியோர் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், "வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் நடைபெற வேண்டும். தபால் வாக்குகள், இவிஎம் வாக்குகள் ஆகியவை நேர்மையாகவும், நியாயமாகவும் எண்ணப்பட வேண்டும்.

14 மேசைகளிலும் தனித் தனியாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, தெளிவாக வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிக்க வேண்டும்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு

தபால் வாக்குகள், மூன்று மணி நேரம் எண்ணிய பிறகு இவிஎம் வாக்குகள் எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஒருவர் இரண்டு அடையாள அட்டை வைத்துள்ளார்.

இதுபோன்று சந்தேகம் உடைய நபர்களை சென்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குப்பையில் ஜொலித்த 10 சவரன்... கடமை தவறாத தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details