தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவின் மூன்றாம் தலைமுறை வாரிசாகிறாரா உதயநிதி? - ஓர் அலசல்! - உதயநிதி அமைச்சர்

திமுக சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது வளர்ச்சி மற்றும் கடந்து வந்த பாதை குறித்தும், மேலும் உதயநிதி தனது திமுக அரசியல் அதிகாரத்தில் மூன்றாம் தலைமுறை வாரிசாக உள்ளாரா? என்பது குறித்தும் இந்த கட்டுரையில் காண்போம்.

திமுக
திமுக

By

Published : Dec 13, 2022, 11:02 PM IST

சென்னை:தொடக்கத்தில் சினிமாவில் வலம் வந்த உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் நேரடியாக திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளையும் வென்று திமுக அபார வெற்றி பெற்றது.

இதற்கு உதயநிதியின் தேர்தல் பிரசாரம் முக்கியப்பங்கு வகித்தது என திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் வெள்ளக்கோவில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டபோது திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்க உள்ளதாக அப்போது பேசப்பட்து.

அப்போது, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கு மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார், உதயநிதி. பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து உதயநிதி தேர்தலைச் சந்தித்து அமோக வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியே உதயநிதியின் அரசியல் பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மதுரையில் நடந்த பிரசாரத்தில் செங்கல்லில் 'எய்ம்ஸ்' என்று எழுதி, திமுக மக்களிடையே உயர்த்தி காட்டிய நிகழ்வு பெரிதும் பேசப்பட்டது.

இதன் காரணமாக அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டுமென ஆரம்பம் முதலே மூத்த திமுக அமைச்சர்கள் குரல் கொடுத்து வந்தனர். எனினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் அமைச்சர் பொறுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென பல்வேறு இடங்களில் கூறி வந்தார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் பகிரப்பட்டது.

இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம், மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் வரிசையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது என்பது வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பி வருகின்றன.
உதயநிதி திமுகவின் சமூக ஊடகத் தளங்களில் ஒரு நட்சத்திர ஈர்ப்பாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுகவின் சமூக ஊடகத் தளங்களில் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள் மற்றும் உதயநிதியின் தொகுதியில் உள்ள குடிசைப்பகுதிகள், குறிப்பாக மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அடிக்கடி வருகை தரும் காட்சிகள் இடம்பெறும் என்பது நிதர்சனம்.

திமுக நிறுவனர் சி.என் அண்ணாதுரை ஆட்சிக்குப் பிறகு தி.மு.க.வை கைப்பற்றிய கருணாநிதி, பல ஆண்டுகளாக மகன்கள் ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி மற்றும் மகள் கனிமொழி உள்ளிட்டோரை கட்சியில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினார். இருப்பினும், கருணாநிதி, ஸ்டாலினை அரசியலில் படிப்படியாக கொண்டு வந்தார். மேலும் ஸ்டாலின், தனது 50 வயதுக்கு மேல்தான் அமைச்சரவை பதவியைப் பெற்றார். ஆனால், உதயநிதி தனது 45ஆவது வயதிலேயே அமைச்சர் பதவி பெற்றுள்ளார்.

2006-2011ஆம் ஆண்டு ஆட்சியில் கருணாநிதி அமைச்சரவையில் ஸ்டாலின் நியமிக்கப்பட்டபோது, ​​தகுதியான தலைவர்களை விட ஸ்டாலின் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தபோதும் அப்போது கருணாநிதி, ஸ்டாலினுக்கு வழங்கிய அமைச்சர் பதவியினால் தான் பிற்காலத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடிந்தது. அதே போன்று உதயநிதி தற்போது இதே போன்ற குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடலாம். இந்த நியமனம் தான் அவருடைய அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்.

அ.மார்க்ஸ்

இது குறித்து அரசியல் ஆய்வாளர் அ. மார்க்ஸ் கூறுகையில், "ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைப்பது என்ற நிலையில், ஒரே குடும்பத்திலிருந்து அடுத்தடுத்து வாரிசுகள் வரும்போது, ஜனநாயகம் என்ற கூற்று அடிபடுகிறது. குடும்ப அரசியலை சட்ட விரோதம் என்று சொல்ல முடியாது. ஆனால், பொதுவான பார்வையில் அரசியலில் வாரிசு என்பது ஏற்புடையது அல்ல", எனக் கூறினார்.

இதையும் படிங்க:Minister உதயநிதி: விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை - அமைச்சர் அன்பில்

ABOUT THE AUTHOR

...view details