தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளை: திமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு - நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

திருவான்மியூர் 179ஆவது வார்டில் நேற்று நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது திமுகவைச் சேர்ந்த நான்கு நபர்கள் கையில் கத்தியுடன் வந்து வாக்குச்சாவடியில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் திமுகவினர் கையில் கத்தியுடன் ரகளை
திருவான்மியூர் வாக்குச்சாவடியில் திமுகவினர் கையில் கத்தியுடன் ரகளை

By

Published : Feb 20, 2022, 10:28 PM IST

சென்னை: திருவான்மியூர் ஓடைக்குப்பம் 179ஆவது வார்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசன் போட்டியிட்டார். திமுக சார்பில் கயல்விழி என்பவர் போட்டியிட்டார்.

ரகளையில் ஈடுபட்ட திமுக கட்சியினர்

நேற்று(பிப்.19) வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திமுக ஆதரவாளர் கதிர் கையில் கத்தியுடன் நான்கு பேருடன் வந்து வாக்குப்பதிவு மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் வாக்காளர்களை வெளியேறக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் திமுக பிரமுகர் கதிர் என்ற கதிரவன் மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் மீது 504- பொது அமைதியை கெடுக்கும் வகையில் பிறரை தூண்டிவிடுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவான்மியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கதிர் மற்றும் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:'தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்'- முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details