மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்வு எழும்பூர் சிராஜ் மஹாலில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி தயாநிதி மாறன், எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ சேகர் பாபு, எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'திமுக பனங்காட்டு நரி... யாருக்கும் அஞ்சாது' - மு.க.ஸ்டாலின் - chennai ayiram vilakku hussain
சென்னை: திமுக பனங்காட்டு நரி எந்த போராட்டம் நடத்தவும் அஞ்சாது என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
நினைவேந்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், உசேன் திமுக வின் கொள்கைத் தங்கம் ஆவார். திமுக இயக்கம் என்றால் என்ன, எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது உசேன் தான். நான் ஆயிரம் விளக்கில் முதன் முதலில் சட்ட மன்ற வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே அவர்தான். என்னை வேட்பாளராக நிறுத்தாமல் கலைஞர் தட்டி கழித்த போது அறிவாலயத்தில் உசேன் போராட்டமே நடத்திவிட்டார். இவ்வாறு உசேனின் தியாகத்தை சொல்லிக்கொண்டே இருக்கலாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், நம் தமிழ் மொழியை காப்பதற்கு இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நாளை ரத்து செய்யப்படவில்லை ஒத்திதான் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளித்த விளக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவே தவிர பயந்து போய் அல்ல. 'திமுக பனங்காட்டு நரி. எந்த போராட்டம் நடத்தவும் அஞ்சாது' என்றும் இந்தி திணிப்பை எதிர்போம் என்றும் உசேனின் நினைவேந்தலில் சபதமேற்போம் எனவும் அவர் கூறினார்.