தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை பொருளாதார நெருக்கடி; திமுக எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்கல் - Chief Minister's General Relief Fund

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்- திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்- திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

By

Published : May 5, 2022, 7:25 PM IST

சென்னை : திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’’ என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை (மே3) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் தி.மு.கழகத்தின் பாராளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசுப்பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு - நாளை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details