தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ரயில்வே பணிகளை ஆய்வுசெய்த டி.ஆர். பாலு எம்.பி.! - டி ஆர் பாலு

சென்னை: தனது தொகுதி மக்கள் ரயில்வே துறை சம்மந்தமாக கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வகையில், ரயில்வே அலுவலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சென்று ரயில்வே பணிகளை ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு ஆய்வுசெய்தார்.

dmk mp t r balu inspection on his own Lok Sabha constituency  t r balu inspection railway works  திமுக மக்களவை உறுப்பினர்  ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர்  டி ஆர் பாலு  ரயில்வேப் பணிகளை ஆய்வு செய்த டி ஆர் பாலு
ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு ஆய்வு

By

Published : Feb 25, 2020, 4:58 PM IST

ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, தனது தொகுதிக்குள்பட்ட அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அவரிடம் அளித்தனர்.

அதில், ரயில்வே சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரினை ஏற்ற அவர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்கள், ரயில்வே வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

இதனிடையே ஆலந்தூர் நிதி மேல்நிலைப்பள்ளி அருகே கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகளையும், மடுவின்கரை பச்சையம்மன் கோயில் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணிகளையும் ஆய்வுசெய்தார்.

ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு ஆய்வு

மேலும், பல்லாவரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைபாதை அமைக்கும் இடத்தைப் பார்வையிட்டார். இதன்பிறகு குரோம்பேட்டை வைஸ்ணவா கல்லூரி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி, தாம்பரம் ரயில் நிலையத்தில் தேவையான கழிப்பிட வசதி, கூடுதல் நகரும் படிக்கட்டுகள் தேவையா என்பது குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே சம்பந்தப்பட் குறைபாடுகள் விரைவில் நீக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, தென்னக ரயில்வே மண்டல அலுவலர்கள், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.மோ. அன்பரசன், இ. கருணாநிதி. எஸ்.ஆர். ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்: சிஏஏவிற்கு எதிராக தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details