சென்னை: கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் (Dmk Mp Ramesh) சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்குப் பணிபுரிந்துவந்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். காவல் துறையினர் விசாரித்துவந்த இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலைசெய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேஷ், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) ரமேஷ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.