திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
‘தமிழர்களை உரசாதீர்கள்’ - மத்திய அரசுக்கு எதிராக திமுக தீர்மானம்! - திமுக
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Stalin
இக்கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், இந்தி திணிப்பிற்கு எதிராகவும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு:
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிபிம்பங்களாகத் திகழ்ந்திட வேண்டும்.
- திமுக-வை இந்தியாவின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக உயர்த்திய தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமைப்பண்பை போற்றுவோம்
- முனைப்புடனும், ஆர்வத்துடனும் வாக்காளர்களைச் சந்தித்திடுக!
- தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திடுக!
- “மும்மொழித்திட்டம்” என்று தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்!
- ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெறுக - காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்திடுக!