தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மத்திய, மாநில அரசுகளின் கொலைகள் தான் நீட் மரணங்கள்’ - கனிமொழி ஆவேசம் - திமுக மகளிரணி தலைவர் கனிமொழி நீட் கருத்து

சென்னை: நீட் தேர்வு காரணமாக நிகழும் மரணங்கள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகள் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கனிமொழி
கனிமொழி

By

Published : Sep 12, 2020, 4:39 PM IST

கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை அமைப்பு திட்டமிட்டபடி நாளை (செப்.,13) நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் ?”எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் தகனம்!

ABOUT THE AUTHOR

...view details