திமுக மகளிர் அணி கூட்டம் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், கல்லூரியில் மாணவி தற்கொலைகளை தடுக்க வலியுறுத்தியும், நிர்பயா நிதியை பயன்படுத்தாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மொத்தம் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம். இங்கு சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக அரசு நிர்பயா நிதியை பயன்படுத்தாதது, அவர்கள் பெண்கள் பாதுகாப்பு மேல் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது. வெங்காய விலை உயர்வை பற்றி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் பேச்சு, அவர் நடுத்தர, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் வைத்துள்ள பார்வையையும், அவரது மனநிலையை நன்கு வெளிப்படுத்துகிறது.