இதுதொடர்பாக கனிமொழி தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: '10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்த தமிழ்நாடு அரசு, 'சிறப்புக் குழந்தைகள்' மற்றும் 'மாற்றுத் திறன்' மாணவர்களை கரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு, 'சிறப்புக் குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்' தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித்தேர்வுக்கான மதிப்பெண் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறப்புக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் சுமார் 1000 பேருக்கு வரும் திங்கள்கிழமை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி அக்குழந்தைகளின் பெற்றோர்கள், மாற்றுத்திறனாளி நலன் ஆணையரை சந்தித்தனர். அப்போது தங்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.