தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் புதிய ஆதார் அட்டைகளில் அங்கிகரிக்கப்பட்ட மாநில மொழிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. இருப்பினும், அவற்றில் ’எனது ஆதார், எனது அடையாளம்’ என எழுதப்பட்டிருந்த வசனங்கள் தற்போது இந்தி மொழியில் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
ஆதாரில் மாநில மொழிகள் புறக்கணிப்பு: கனிமொழி கண்டனம் - எனது ஆதார், எனது அடையாளம்
சென்னை: இந்தி மொழியைத் திணித்து மாநில உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து, கருத்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, "அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும், ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையை புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், 'எனது ஆதார் எனது அடையாளம்' என்ற வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.