திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று 52ஆவது பிறந்தநாள். பிறந்தநாள் குறித்து அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், எனது பிறந்தநாளைக் கொண்டாட தேவையில்லை" என முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி! - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தனது சகோதரருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

dmk-mp-kanimozhi
அதன்படி, தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: எனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை - கனிமொழி எம்.பி.