நிவர், புரெவி ஆகிய புயல்களால் சென்னை காசிமேடு கடற்கரையில் 35 படகுகள் கடலில் மூழ்கின. 500க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் அப்பகுதியில் திமுக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆய்வு செய்தார். அவருடன் திமுக பொறுப்பாளர் இளைய அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது கலாநிதி வீராசாமி விசைப்படகு உரிமையாளர்களிடம் சேதம் குறித்து கேட்டறிந்தார். மீனவ சங்கம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.