தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தலில் உதயநிதி? அறிவாலயத்தில் அரங்கேறிய வாரிசு விருப்பமனு! - anna arivalayam

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்றும் கெளதம சிகாமணி விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார்.

dmk

By

Published : Sep 23, 2019, 2:23 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. திமுகவைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது காலியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உதயநிதி போட்டியிட கெளதம சிகாமணி விருப்பமனு

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கெளதம சிகாமணி விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத் தேர்தல்!

ABOUT THE AUTHOR

...view details