தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு - அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Central government river law
Central government river law

By

Published : Jan 4, 2022, 6:06 PM IST

சென்னை: 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தச் சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாகச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும்வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும், சட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் முறையீடுசெய்தார்.

இந்த முறையீட்டை ஏற்று நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Chennai Airport Covid Cases: சென்னை விமான நிலையத்தில் 18 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details