தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன.6இல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் - DMK MLA'S MEET AT ANNA ARIVALAIYAM

சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற ஜனவரி ஆறாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DMK MLA'S MEET ON JANUARY 06 AT ANNA ARIVALAIYAM
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

By

Published : Jan 1, 2020, 10:43 AM IST

Updated : Jan 1, 2020, 11:08 AM IST

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனவரியில் கூடும் தமிழ்நாடு சட்டபேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி ஆறாம் தேதி நடைபெறும் என திமுக சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க: ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

Last Updated : Jan 1, 2020, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details