தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு! - ceremony

சென்னை: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

By

Published : May 28, 2019, 11:20 AM IST

17ஆவது மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டின் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், 13 இடங்களில் திமுகவும், ஒன்பது இடங்களில் அதிமுகவும் வெற்றிபெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இன்று திமுக சார்பில் வெற்றிபெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இன்று பதவியேற்ற திமுக சட்டமன்றஉறுப்பினர்களின் விவரம்:

  1. ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ - சண்முகையா
  2. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ - மருத்துவர் சரவணன்
  3. அரவக்குறிச்சி எம்எல்ஏ - செந்தில் பாலாஜி
  4. திருவாரூர் எம்எல்ஏ - பூண்டி கலைவாணன்
  5. தஞ்சாவூர் எம்எல்ஏ - நீலமேகம்
  6. ஓசூர் எம்எல்ஏ - எஸ்.ஏ.சத்யா
  7. ஆம்பூர் எம்எல்ஏ - அ.செ.வில்வநாதன்
  8. குடியாத்தம் எம்எல்ஏ - காத்தவராயன்
  9. பெரியகுளம் எம்எல்ஏ - கே.எஸ்.சரவணக்குமார்
  10. ஆண்டிபட்டி எம்எல்ஏ - ஏ.மகாராஜன்
  11. பூந்தமல்லி எம்எல்ஏ - கிருஷ்ணசாமி
  12. பெரம்பூர் எம்எல்ஏ - ஆர்.டி.சேகர்
  13. திருப்போரூர் எம்எல்ஏ - எஸ்.ஆர்.இதயவர்மன்

ABOUT THE AUTHOR

...view details