இது தொடர்பாக சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "வங்கி கடன் வழங்கும் வசதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டில் கடன் கிடைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் தமிழின துரோகி. ஆர்.பி.ஐ படி அனைத்து விதத்திலும் வளர்ச்சியுள்ள நாடு தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளது. இதை பயன்படுத்தி இனி தமிழ்நாட்டிற்கு கடன் இல்லை என்று கூறியுள்ளனர்.
இது முட்டாள் தனம். எங்கு வளர்ச்சி உள்ளதோ அங்கு தான் கடன் தேவைப்படும். இந்து மதத்தினர் 90 விழுக்காடு பேர் உள்ள நாட்டில் இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறு. எச். ராஜா, நாராயணன் திருப்பதி, கே.டி. ராகவன் போன்றவர்களை விட கோயில்களுக்கும், இந்து மதத்திற்கும் அதிகம் நான் சென்றுள்ளேன். ஆனால், அவர்கள் ஏதோ இந்து காவலாளி போல் பேசி வருகின்றனர்.