கிண்டியில் உள்ள சிட்கோவில் 1959ஆம் ஆண்டு கமலநாதன்,எஸ்.கே கண்ணன் ஆகியோருக்கு அரசு ஒதுக்கிய குத்தகை நிலம் 1,500 சதுரடியை போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா. சுப்ரமணியன், தனது பதவி காலத்தில் அவரது மனைவி பெயருக்கும், அவரது பெயருக்கும் மாற்றம் செய்ததாக எஸ்.பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கக்கோரி இருவரும் மனுத் தாக்கல் செய்த நிலையில், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சிட்கோ நிலமோசடி வழக்கு: மா. சுப்பிரமணியன் ஆஜர்! - DMk MLA M Subramanian
சென்னை: சிட்கோ நிலமோசடி வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தன் மனைவியுடன் சிபிசிஐடி காவல்துறையினர் முன் ஆஜராகினர்.
ma. subramaniyan
சிபிசிஜடி விசாரணைக்கு வந்த காஞ்சனா
இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர், திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனையும் அவரது மனைவி காஞ்சனாவையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர்.