தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெ. அன்பழகன் மறைவு வருத்தமளிக்கிறது' - முதலமைச்சர் - எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவு

சென்னை: கரோனாவால் உயிரிழந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

-chief-minister-condolences
-chief-minister-con-chief-minister-condolencesdolences

By

Published : Jun 10, 2020, 9:56 AM IST

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், மூத்த நிர்வாகியுமான ஜெ. அன்பழகன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருந்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ. அன்பழகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details