தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆயிரம் பேரையே கவனிக்கல... லட்சம் பேரை எப்படி காப்பாற்றுவாங்க' - ஸ்டாலின் வேதனை!

சென்னை: ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத தமிழ்நாடு அரசு, பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

sdsd
sdsd

By

Published : Apr 22, 2020, 4:51 PM IST

கரோனா வைரஸூக்கு எதிராக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் தீவிரமாகப் போராடி வருகின்றனர். ஆனால், மருத்துவர்களுக்குச் சரியான அடிப்படை வசதிகள் இல்லை எனப் போராட்டங்கள் நடைபெற்றது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்தியது கரோனாவை விடக் கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட, போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:'உலகின் சுழற்சியையே மாற்றிய கரோனா' - புதிய இருப்பிடத்தைக் கண்டறிந்த வனவிலங்குகள்!

ABOUT THE AUTHOR

...view details