முதலமைச்சர் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.19) காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாள் படத்திற்கு, மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியும் முதலமைச்சருக்கு நேரில் ஆறுதல் கூறினர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், கடந்த 12ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்குப் புறப்பட்டு சென்றார்.