தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் காட்டிய சமூக நீதியைப் பின்பற்றுக' - மு.க. ஸ்டாலின் ட்வீட்! - stalin recent tweet news

சென்னை: நீட்தேர்வு ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறது என்பதை உணர்ந்து நீதிமன்றம் காட்டிய சமூக நீதிப்பாதையில் மத்திய, மாநில அரசுகள் செல்ல வேண்டும் என்று திமுத தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

neet exam stalin tweet

By

Published : Nov 5, 2019, 5:35 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உயர் நீதிமன்றத்தில் நீட் பயிற்சி மையங்கள் குறித்து அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையங்களில் பயிலாதவர்கள் என்று கூறியிருந்தது.

நீட் பயிற்சி மையத்தில் பயிற்சிக் கட்டணம் லட்சங்களில் இருப்பதால் ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதனை உணர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த நீட் தேர்வை, ஏன் தற்போதுள்ள அரசு திரும்பப் பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் அது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், ’ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது.

இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர். இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும்!' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! - சிதம்பரம் அடடே

ABOUT THE AUTHOR

...view details