விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் ந.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். அதேபோன்று திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விக்கரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் பணி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். திமுக எம்எல்ஏ பொன்முடி தலைமையில் எம்.பி ஜெகத்ரட்சகன், கே.எஸ்.மஸ்தான், செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் நாங்குநேரி தொகுதிக்கான தேர்தல் பணி பொறுப்புக்குழு எம்.எல்.ஏ ஐ.பெரியாசாமி தலைமையில், எம்.பி.கனிமொழி உட்பட பலரை நியமித்துள்ளது.