சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களில் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை(மார்ச். 4) நடைபெற உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் போட்டி!!! - திமுக சென்னை மேயர் வேட்பாளர்
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பாக பிரியா ராஜன் போட்டியிடுகிறார்.
பிரியா ராஜன்
அந்த வகையில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜன் போட்டியிடுகிறார். துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுகிறார்.
அதேபோல கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயர் வேட்பாளராக வெற்றிச்செல்வன் போட்டியிடுகிறார். மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக இந்திராணி போட்டியிட உள்ளார்.