தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு பாதிக்கப்பட்டோரின் நிலை என்ன? மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு - 31 people affected by dengue fever

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு

By

Published : Oct 6, 2019, 2:18 PM IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்ததோடு, மருத்துவமனையில் ஆய்வும் செய்தார்.

மருத்துவரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்
பின்னர் செய்தியாளகளிடம் பேசிய அவர், ‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த காலங்களில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்திருக்கக் கூடிய கொடுமையும் நடந்திருக்கிறது.
நோயாளிகளிடம் நலம் விசாரிக்கும் திமுக தலைவர்

தற்போது இந்த மருத்துவமனையில் 31 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது மட்டுமல்லாமல் மொத்தம் எத்தனை பேர் இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் நகைச்சுவையாக கொசுவுக்கு பின், கொசுவுக்கு முன் என்று ஏதோ பேட்டி கொடுத்துவருகிறார். அது கண்டனத்துக்குரியது. நீட் தேர்வு ஆள்மாறட்டம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இயக்குநர் மணிரத்னம் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு குறித்து நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details