மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னை - வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
பின்னர், அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ. ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.