மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் பெரியார் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து (96) மாரடைப்பால் நேற்று (ஏப்ரல் 6) காலமானார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறைந்த வே. ஆனைமுத்து உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தாம்பரம் எம்எல்ஏ ராஜா, திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.