தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளைத் திறப்பது நியாயமல்ல: மு.க. ஸ்டாலின் - டாஸ்மாக் கடை திறப்பு

சென்னை: ஊரடங்கினால் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது நியாயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DMK leader stalin statement  TASMAC opening  tamilnadu tasmac opening news  திமுக தலைவர் முக ஸ்டாலின்  டாஸ்மாக் கடை திறப்பு  தமிழ்நாடு டாஸ்மாக் கடை திறப்பு
வருவாய் இழப்பை சரிசெய்ய டாஸ்மாக் கடைகளைத் திறப்பது நியாயமல்ல

By

Published : May 5, 2020, 11:22 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 500-க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மே 7ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக்மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டைவிட குறைவான நோய்த் தொற்று உள்ள அண்டை மாநிலங்களின் எல்லையில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள் என மக்கள் மீது பழிபோட்டு, ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல!

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை, உரிமையுடனும் துணிவுடனும் வலியுறுத்திப் பெற்று வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டிய அதிமுக அரசு, ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும்.

ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details