தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி அதிமுக நீதிமன்றம் செல்ல வேண்டும் - ஸ்டாலின்

சென்னை: நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி ஏழு மாநில அரசுகளைப் போல் அதிமுக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Aug 27, 2020, 1:44 AM IST

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்ய ஏழு மாநில முதலமைச்சர்கள் முடிவுசெய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வரவேற்கிறேன்.

கரோனா என்ற கொடிய நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு, ஏழை - எளிய பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமையும் இத்தகைய தேர்வுகளை நடத்துவதில் மட்டும் மும்முரமாக இருப்பதை ஏழு மாநில அரசுகள் எதிர்ப்பதை இந்திய நாடே மனப்பூர்வமாக வரவேற்கும்.

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்ப்பதாகத் தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அதிமுக அரசு, இப்போது என்ன செய்யப்போகிறது?

நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால்; மாணவர்கள் மீதான அக்கறை உண்மையானால்; தமிழ்நாடு அரசும் மற்ற மாநில அரசுகளைப் போல உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details