தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: பொதுமக்களுடன் நேரில் சந்திப்பு

சென்னை: திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார்.

-chennai
-chennai

By

Published : Feb 4, 2020, 7:36 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதிகையெழுத்துஇயக்கம்தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர்.

இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8ஆம் தேதி வரை தொடரும் என்றும், மொத்தம் ஒரு கோடி கையெழுத்துகள் பெற திட்டமிட்டுள்ளதாகவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்டப் பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.

கையெழுத்து பெற்ற போது

இதையும் படிங்க:குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்...

ABOUT THE AUTHOR

...view details