தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!' - பெரியாரின் 47ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

தந்தைப் பெரியாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என உறுதி ஏற்றுள்ளார்.

DMK leader Stalin pays homage to the statue of Periyar on his death anniversary
DMK leader Stalin pays homage to the statue of Periyar on his death anniversary

By

Published : Dec 24, 2020, 10:56 AM IST

சென்னை: சுயமரியாதை, சமத்துவம், சாதி ஒழிப்பு பகுத்தறிவு, பெண் விடுதலை என தன் உயிர் நீங்கும் வரை போராடிய, சமூகத்தில் பல மாற்றங்களை கொணர்ந்த தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் அரசியலின் பல மாற்றத்தை நிகழ்த்தி, அவர் இறந்த பின்னும் இன்றுவரை அவரது புகழை அனைத்து அரசியல் தலைவர்களும் போற்றிவருகின்றனர். அவரது நினைவுநாளான இன்று அவருக்குத் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்திவருகின்றனர்.

பெரியாருக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்

அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ள அவர், "சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று!

ஸ்டாலின் ட்வீட்

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவுகூரப்படுவார்!

அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!" என உறுதி ஏற்றுள்ளார்.

இதையும் படிங்க: ’நான் பெரியாரின் கைத்தடி’ - கி.வீரமணி பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details