திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அஞ்சல், இணைய வழிக் கல்வி முறைகளிலான திராவிடப் பள்ளியை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் சீரிய முயற்சியால் இன்று (செப்.17) திராவிடப் பள்ளி தொடங்கி வைக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்த நாள், திமுகவின் பிறந்தநாளும் கூட. நேற்று முன்தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். இந்த மூன்று விழாக்களை முப்பெரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பேராசிரியர் சுப.வீ இந்தத் திராவிடப் பள்ளியைத் தொடங்கி வைத்திருக்கிறார்.