சென்னை:கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இன்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தார்.
மேலும், 70 லட்ச ரூபாய் செலவில் இறகுப் பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.