சென்னை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். இதனையடுத்து தாம்பரம் பிரதான சாலையான சண்முகம் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் மீது அதிக சக்திவாய்ந்த சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடித்து பெரும் புகையுடன் தீப்பொறிகள் சிதறின.
ஸ்டாலின் வருகை: பட்டாசு வெடித்த தொண்டர்கள் பலருக்கும் தீக்காயம்! - ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
சென்னை: தாம்பரத்தில் ஸ்டாலினை வரவேற்க நூற்றுக்கணக்கானோர் மத்தியில் வெடிகள் வெடிக்கப்பட்டதால் காவல் துறை அலுவலர் உட்பட பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
இதில் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை காவல் அலுவலர் ஒருவருக்கு காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அதேபோல் பெருமளவு தீப்பொறிகள் சிதறி சாலையிலிருந்த பெண்கள் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதும் விழுந்ததால் பலருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
மேலும் அங்கு இருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலர் காயம் அடைந்தனர். இதனால் தாம்பரம் பகுதியில் பெரும் சலசலப்பு நிலவியது.