தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஸ்டாலின் - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனையில் தனது இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

MK Stalin was vaccinated for second time at a private hospital in Alwarpet
MK Stalin was vaccinated for second time at a private hospital in Alwarpet

By

Published : Apr 22, 2021, 11:56 AM IST

சென்னை:கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொண்டார்.

இவர் ஏற்கனவே, கடந்த மார்ச் 9ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு, நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் என மக்களிடம் அறிவுறுத்தியிருந்தார்.

இவர் தேர்தலுக்குப் பிறகு சுமார் ஆறு நாட்கள் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில், இன்று அவர் இரண்டாம் தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details