திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, சமூகநீதியைப் பாதுகாக்கவும், பல நூற்றாண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள, இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கு சமத்துவத்தை உறுதிசெய்யவும், அவர்கள் சம வாய்ப்பைப் பெற்றிடவும் திமுக நடத்தும் சமூகநீதிக்கான போருக்கு ஆதரவு கோரி, தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு தமது ஆதரவை நல்குவதாகப் பதிலளித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.