அம்பேத்கரின் 129அஅவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கல்வியை ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அம்பேத்கர்: மு.க. ஸ்டாலின்! - 129ஆவது அம்பேத்கார் ஜெயந்தி: கல்வியை ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை -முக ஸ்டாலின்!
சென்னை: 129ஆவது அம்பேத்கர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, அவரின் உருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
![கல்வியை ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அம்பேத்கர்: மு.க. ஸ்டாலின்! 129ஆவது அம்பேத்கார் ஜெயந்தி: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6785670-thumbnail-3x2-stalin.jpg)
அதன் பிறகு அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், ”சமத்துவம் என்ற உணர்வையும், தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திய அண்ணல் அம்பேத்கரின் 129ஆவது ஆண்டு பிறந்தநாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவு கூர்வோம். அறிவையும், கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை. சமத்துவம், ஜனநாயகம் இரண்டையும் தமது கண்களாகப் போற்றியவர். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அம்பேத்கர் ஜெயந்தி: பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை