முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ஆம் தேதி உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனால் முதலமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.